June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப்; நிர்வாக பணிகளை தொடங்கிவிட்டார் ஜோ பைடன்

1 min read

Trump refuses to admit defeat; Joe Biden has begun management

9/11/2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அதேநேரம் நிர்வாக பணிகளை ஜோ பைடன் தொடங்கிவிட்டார்.

ஜோ பைடன் வெற்றி

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதனை அடுத்து
அமெரிக்காவின் 46-வது அதிபராக அவர் பொறுப்பு ஏற்க உள்ளார். அதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.
அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி தான் முறைப்படி பதவியேற்க உள்ளார். அவர் அதிபர் பொறுப்பை ஏற்று வெள்ளை மாளிகை செல்வதற்கு இன்னும் 70 நாட்களுக்கு மேல் உள்ளன.

டிரம்ப் மறுப்பு

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான உடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் செயல்திட்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகங்களை சட்டரீதியாக எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டிரம்பிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறி வருகிறார்.

4 அம்சங்கள்

வெற்றிபெற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் ஆட்சி மாற்றத்துக்கான இணையதளம் மற்றும் டுவிட்டர் கணக்கை தொடங்கி, நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பைடன் தொடங்கி உள்ள ஆட்சிமாற்ற இணையதளத்தில், கொரோனா, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய 4 அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.