June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் அதிகரித்து வரும் கிரிமினல் எம்.எல்.ஏ.க்கள்

1 min read

Criminal MLAs gathering in Bihar

13/11/2020

பீகாரில் கிரிமினல் வழக்குகள் உள்ள எம்எல்.ஏ.க்கள் அதிகரித்து வருகிறார்கள். தற்போது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. 81 சதவீதம் பேர் பணக்காரர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க அறிக்கை தெரிவிக்கிறது.

பீகார்

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் குறைந்தது 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது முந்தைய சட்டமன்றத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரிப்பு.

மேலும், மாநில சட்டசபையில் பணக்கார எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2015 ல் 123 ஆக இருந்தது தற்போது அது 194 ஆக உயர்ந்துள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்ற 243 வேட்பாளர்களில் 241 பேரின் சுய அறிவிப்பு பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் தெளிவாக இல்லாததால் பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. அதில் பா.ஜனதாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றொருவர் ராஷ்டீரிய ஜனதா தளகட்சியை ஒருவர்.

வென்ற 241 வேட்பாளர்களில் 163 பேர் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. முந்தைய சட்டசபையில், 142 எம்.எல்.ஏக்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த முறை, குறைந்தது 123 வென்ற வேட்பாளர்களில் அல்லது 51 சதவீதம் பேர் கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை குறிப்பிட்டு உள்ளனர்.

2015 ஆம் ஆண்டில், வென்ற வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர்கள் மீது இத்தகைய கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்திருந்தனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது 19 பேர் கொலை, 31 கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான எட்டு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

கட்சிவாரியாக கணக்கிட்டால்…

74 ராஷ்டீரிய ஜனதா தள எம்.எல்.ஏக்களில் 44 பேர் அல்லது 73 சதவீதம் பேர் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர் இது முக்கிய கட்சிகளில் மிக உயர்ந்த அளவு ஆகும்.

பாஜகவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 73 எம்.எல்.ஏக்களில் 47 பேர் கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர் (47%). இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 43 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்களில் 20 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

காங்கிரசில் வென்ற 19 எம்.எல்.ஏக்களில், 10 பேர் கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெற்றி பெற்ற 12 வேட்பாளர்களில் எட்டு பேர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியில் வென்ற ஐந்து வேட்பாளர்களும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர்.

கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர, பணக்கார எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 243 எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் (67%) ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்களை அறிவித்திருந்தாலும், இந்த முறை 194 அல்லது 81% ஆக உயர்ந்துள்ளது.

இதில் பா.ஜனதா முதலிடத்தில் உள்ளது, அதன் எம்.எல்.ஏக்களில் 89 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கின்றனர். ஐக்கிய ஜனதா தளத்தில் (88 சதவீதம்), ராஷ்டீரிய ஜனதா தளத்தில் (87 சதவீதம் பேர்) மற்றும் காங்கிரசில் (74 சதவீதம் ). 2015 ல் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து ரூ.3.02 கோடியாக இருந்த நிலையில், அது 2020 ல் ரூ.4.32 கோடியாக அதிகரித்துள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தளத்தில் மொகாமா தொகுதியில் வென்ற அனந்த் சிங், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களிலும் சொத்துக்களைக் கொண்ட பணக்காரர் (ரூ .68 கோடிக்கு மேல்). ராஷ்டீரிய ஜனதா தளத்தில் அலாலி (எஸ்சி) தொகுதியிலிருந்து வென்ற ராம்வ்ரிக் சதா, வெறும் ரூ .70,000 சொத்துடன் ஏழ்மையானவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.