மதுரையில் ரவுடி கழுத்தை அறுத்துக் கொலை
1 min read
Rowdy beheaded in Madurai
15/11/2020
மதுரை சென்மேரிஸ் சர்ச் அருகில் ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
கொலை
மதுரை கீழவெளி வீதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கிறிஸ்தவ தேவாலயம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தலை வேறு உடல் வேறாக கடந்தது.
அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
. தகவல் அறிந்து வந்த சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சிவபிரசாத் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தைபார்த்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் ரவுடி என்பது தெரியவந்தது.
அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இந்த கொலை சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொலையாளிகள் யார் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் . கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
.
மாலை வேளையில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது