June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு மேற்கு வங்காள நடிகர் மரணம்

1 min read

West Bengal actor dies to Corona

15/11/2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி மரணம் அடைந்தார்.

கொரோனா

இந்தியாவில் சில முக்கிய பிரமுகர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்காள நடிகர் ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளார்.

அவரது பெயர் சவுமித்ரா சாட்டர்ஜி. 85 வயதான அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, உலகப் பிரசித்தி பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேயின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சவுமித்ரா சாட்டர்ஜிக்கு பத்மபூஷண், தாதா சாகிப் பால்கே உட்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

தீன் கன்யா என்ற திரைப்படத்தில் நடத்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது சவுமித்ரா சாட்டர்ஜி பெற்றவர். கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சவுமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார். கொரோனா வைரஸால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சவுமித்ரா சாட்டர்ஜி உயிர் பிரிந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *