தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,652 people in Tamil Nadu today
17/11/2020
தமிழகத்தில் இன்று 1,652- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 5-வது நாளாக தமிழகத்தில் தொற்று 2 ஆயிரத்துக்கும் கீழே உள்ளது. அதேநேரதம் தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமாகி வருகிறார்கள்.
தமிழக சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றிய தகவலை இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( செவ்வாய்க்கிழமை) மட்டும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 ஆக உள்ளது.
18 பேர் சாவு
கொரோனாவில் இருந்து இன்று 2,314 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 970- ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 18 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,513- ஆக உள்ளது.