June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை- தென் மாவட்டங்கள் இடையே ரெயில்கள் நாளை ரத்து

1 min read
Seithi Saral featured Image

All trains cancelled tomorrow between cheenai -south districts

24/11/2020

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் இடையே ஓடும் அனைத்து ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகின்றன.

புயல்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயல், வலுப்பெற்று நாளை மாலை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரெயில்கள் ரத்து

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

இரு மார்க்கங்களிலும் நாளை(புதன்கிழமை) ஒரு நாள் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *