நிவர் புயல்-நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை
1 min read
Tomorrow is a government holiday across Tamil Nadu due to the storm
24/11/2020
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை விடுப்படுவதாகவும் , அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
முதல்-அமைச்சர் ஆய்வு
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுமுறை
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் . புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
புயல் நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
செம்பரம்பாக்கம்
மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்.
மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.