June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,534 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,534 people in Tamil Nadu today

25/11/2020

தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவ்கள் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,534. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 710 ஆகும்.

மொத்தம் கொரோனா கண்டறியப்பட்டவர்களில் ஆண்கள் 4,68,025 பேர். பெண்கள் 3,06,651 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

சென்னையில் மட்டும் இன்று 467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,067 பேருக்குத் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 1,873 பேர் குணமாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 51 ஆயிரத்து 535 ஆகும்.
சென்னையில் மட்டும் மொத்தம் 2 லட்சத்து13 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.