June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது- நடிகர்கள் கலக்கம்

1 min read

Actress Shakila’s biography becomes a movie – Actors riot

2/12/2020

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி உள்ளது. இதனால் நடிகர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

நடிகை ஷகிலா

தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. அரைகுறை உடையில் ஷகிலா தோன்றும் சுவரொட்டிகள் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

சினிமா படமாக…

ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.
ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

கலக்கம்

ஷகிலாவை மலையாள படங்களில் நடிக்க விடாமல் தடுத்து கேரளாவில் இருந்து வெளியேற்றிய பின்னணியில் சில பிரபல நடிகர்கள் இருப்பதாகவும், அந்த நடிகர்கள் பற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நடிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.