June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? – தமிழருவி மணியன் பதில்

1 min read

Will Rajinikanth come to politics? – Thamilzharuvi Manian answer

2/12/2020

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதற்குகாந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பதில் அளித்தார்.

ரஜினியுடன் சந்திப்பு

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நல்லது என்றும் அடிக்கடி பேசி வந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரேவேசம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி உள்ளது. அவர் அரசியலுக்கு வருவதாக தீர்க்கமாக சொல்லவில்லை.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின்
தலைவர் தமிழருவி மணியன் இன்று ( புதன்கிழமை) சந்தித்து பேசினார். அதன்பின் அவர் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

தெரியாது

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ரஜினிக்குத்தான் தெரியும்.
ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை.

உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.