May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

புரெவி புயலால் 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்

1 min read

6 districts will receive heavy rainfall due to the storm

2/12/2020

புரெவி புயலால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புரெவி புயல்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அந்தப் புயல் இன்று பகல்

பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை

கொண்டிருந்தது.

இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 200

கி.மீ. தொலைவிலும், பாம்பனிலிருந்து 420 கி.மீ.,

குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி

புயல் மையம் கொண்டுள்ளது.

புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து

வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல்

கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில்

காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை

ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய

இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது:-

  • ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி,

நெல்லை, தென்காசி, சிவகங்கை

மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு

வாய்ப்பு உள்ளது.

  • செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஓரிரு

இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையின் திரிகோணமலையில் கரை கடக்கும் புயல் நாளை கேரள மாநிலத்தை தாக்க உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார். இதேபோல் கேரள முதல்வரிடமும் பேசியுள்ளார்.

தமிழகம், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார்.

கேரளாவிலும் ரெட் அலர்ட்

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா கூறியதாவது:-

புரெவி புயல் நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்பி வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும்போது 75-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆறுகளின் கரையோரம் உள்ளவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.