பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும்; மோடி பேச்சு
1 min read
Bharatiyar’s books should be read all over the country; Modi’s speech
11/12/2020
பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பிரதமர் பேசினார்.
பாரதியார் பிறந்தநாள்
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் மொழியும், தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் – பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர் மோடி
புதுடெல்லி:
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன். ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி. துணிச்சலாக செயல்பட்டவர் மகாகவி பாரதி.
தமிழ் மொழி
பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார்
தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பாரதி பேசினார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர் பாரதி
நாடு முழுவதும் படிக்க…
பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
இவ்வாறு பிரமதர் மோடி பேசினார்.