June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை

1 min read

Rajinikanth consults again in Chennai

11/12/2020

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நடிகர் ரஜனிகாந்த் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

ரஜினியின் அரசியல்

கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிவந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது அடுத்த மாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், அதற்கான அறிவிப்பை வருகிற 31-ந் தேதி வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.

அதனன்பின் நேற்று முன்தினம் ரஜினி பெங்களூரு சென்று தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார்.

ஆலோசனை

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் இல்லத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிதாக தொடங்கவிருக்கும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *