மதுரையை 2-ம் தலைநகராக ஆக்குவேன்;- கமல்ஹாசன் உறுதி
1 min read
will make Madurai the 2nd capital; – Kamal Haasan promises
13/12/2020
மதுரையை இரண்டாம் தலைநகராக ஆக்குவேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசார நிகழ்ச்சியை தற்போதை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தற்போது தொடங்கியுள்ளார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரசாரத்தின்போது காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:-
இரண்டாம் தலைநகரம்
கலாச்சார நகரமாக விளங்கிய மதுரையை அழித்துவிட்டார்கள். மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நாம் எடுக்கும் உறுதிமொழி
மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றியே தீருவோம். மதுரையில் மீண்டும் ஒரு புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும்.
நாட்டில் ஊழல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களை ஒழித்துக்கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன்.
தமிழகத்தில் நமது ஆட்சி அமைவது உறுதி. எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான் . எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி காட்டுவேன்.
நற்பணி செய்தால் போதும் என என்னால் இருக்கமுடியவில்லை. அதனால்தான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.
மக்களின் குறைகளை தேடி வந்து தீர்ப்பதே எங்களின் அரசியல் நோக்கம். காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை. இளைஞர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திக்காட்டவேண்டும்.
எங்கள் கட்சியின் கொள்கையும் லட்சியமும் ஒன்றே ஒன்று தான்… அதுவே நேர்மை
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.