100 கோடி தடுப்பூசி டோஸ்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது – உலக சுகாதார அமைப்பு தகவல்
1 min read
100 crore vaccine doses are protected – World Health Organization data
12/12/2020
கோவாக்சின் திட்டத்தின் அடிப்படையில் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை பாதுகாத்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஜெனிவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவாக்சின் திட்டத்தின் அடிப்படையில் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை பாதுகாத்துள்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில், முன்னணி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகள் சேகரிக்கப்படுகிறது.
பைசர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வல்லுநர்கள் முடிவு செய்வார்கள். கோவாக்சின் திட்டத்தில் 189 நாடுகள் பங்கு பெற்றுள்ளது.
இவ்வாறு .அவர் கூறினார்.
ரூ.66,392 கோடி நிதி
இந்தியா போன்ற வளரும் உறுப்பு நாடுகளின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி 66 ஆயிரத்து 392 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
“ஆசிய பசிபிக் தடுப்பூசி பெறும் வசதி” எனும் இத்திட்டத்தின் மூலம், வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி கொள்முதல் உடன், செயல்முறையை பாதுகாப்பாகவும், சமமாகவும், திறமையுடனும் நிர்வகிப்பதற்கான திட்டங்களுக்கு உதவ, நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தடுப்பூசி
அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பொதுமக்களுக்கு செலுத்தப்படலாம் என்று அந்நாட்டு சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறும்போது,
“ கொரானாவுக்காக பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.” என்றார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.