பள்ளிக்கூடத்தில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்
1 min read
Headmaster who raped 5 girls at school
16/12/2020
தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தலைமை ஆசிரியர்
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியில் 40 வயதான ஒருவர் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 7 வயது முதல் 11 வயதுக்குள் இருக்கும்.
ஆபாச படம்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த மாணவிகளை பள்ளிக்கூடத்துக்குள்ளேயே வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம். முதலில் அந்த மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப்படம் பார்க்கச் சொல்லுவாராம். பின்னர் அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவாராம்.
அவரால் பாதிக்கப்பட்ட 2-ம் வகுப்பு மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுபற்றி விசாரிக்கும்போதுதான் தலைமை ஆசிரியரின் குட்டு வெளிச்சத்துக்கு வந்தது.
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அதிகாரிகளுடன் போலீசார் பாதிக்கபட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.