June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கும்” ; எல்.முருகன் பரபரப்பு பேச்சு

1 min read

“BJP to announce first-ministerial candidate in Tamil Nadu”; L. Murugan sensational speech

19/12/2020

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாரதீய ஜனதா தலைமை விரைவில் அறிவிக்கும் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பாரதீய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க. முடிவு செய்தாலும் யார் என்பதை பாரதீய ஜனதா தலைமை விரைவில் அறிவிக்கும். சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும்.
இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் .

இவ்வாறு முருகன் கூறினார்.

அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார். அவரும் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாரதீய ஜனதா தலைமை அறிவிக்கும் என எல்.முருகன் கூறியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.