June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை நீக்க அ.தி.மு.க. கோரிக்கை

1 min read

AIADMK to remove BJP leader L Murugan Request

20/12/2020

பாரதீய ஜனதாவின் தமிழக தலைவர் எல்.முருகனை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளா புகழேந்தி கோரியுள்ளார்.

பாரதீய ஜனதா

பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று அரியலூரில் பேட்டி அளிக்கும்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாரதீய ஜதனாவின் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாரதீய ஜனதா தான் அறிவிக்கும் என்றும் கூறினார். மேலும் தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் எனவும் கூறினார்.
இது தமிழக அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீக்க வேண்டும்

பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்.முருகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், பாரதீய ஜனதா தலைமை அவரை நீக்க வேண்டும்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *