இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ; விமானங்கள் ரத்து
1 min read
A new type of corona virus spreading in the UK; Flights canceled
21/12/2020
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
புதிய கொரோனா வைரஸ்
இங்கிலாந்தின் தென் பகுதியில் கொரோனா வைரசில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன.
விமானங்கள் நிறுத்தம்
கனடா அரசு முதற்கட்டமாக 3 நாட்களுக்கு பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் பிரிட்டனுடனான தரைவழி எல்லையை மூடிவிட்டன.
தென் அமெரிக்காவில், அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனில் இருந்து புறப்படும் மற்றும் பிரிட்டன் செல்லும் நேரடி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. ஈக்வடார் நாடும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பரிசீலித்து வருகிறது.