தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க ரஜினிகாந்த்துக்கு சம்மன்
1 min read
Rajinikanth summoned to probe Thoothukudi shooting
21/12/2020
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தபோது இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். இதுபற்றி ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்தார். அதன்படி ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என தெரிவிக்கப்பட்டது.