June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு

1 min read

Saniperchi Palangal -Dhanush -Kaliyur Narayanan

25-12-2020
உங்கள் ராசி நாயகன் குரு என்பதால் நீங்கள் எப்போது ஆச்சாரத்திற்கும் ஆன்றோர்களுக்கும் மரியாதை கொடுப்பவராக இருப்பீர்கள். உங்கள் ஜதகத்தில் குரு சாதகமாக இருந்தால் போதிக்கும் பணியான ஆசிரியர் பணியில் நீங்கள் சிறந்து வீளங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பகை கிரகமாக இருப்பதால் இந்த ராசியினர் பெரும்பாலானோர் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பாக வேலையில் இருக்க சாத்தியமில்லை. மற்ற கிரகங்கள் எல்லாம் நட்பு கிரகங்கள் என்பதால் இந்த ராசியினர் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தன்மை உடையவர்கள். அதேபோல் பார்க்கும் எந்த வேலையானாலும் ஆர்வமுடம் செய்து, செய்யும் தொழிலே தெய்வம் என்று எடுத்துக் காட்டுவீர்கள். சொன்னசொல் மறாமல் நடந்து கொள்வீர்கள். கடுமையாக உழைக்கும் தன்மை கொண்டவர்கள். எந்த விசயத்திலும் இனிமையாக பேசி பிறரை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். உங்கள் ராசியின் சின்னம் வில்&அம்பு. அதற்கு ஏற்ப கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பீர்கள். உங்கள் இலக்கு பெரும்பாலும் தப்பாது.
இவ்வளவு சிறப்புகளை கொண்ட உங்கள் ராசியில் இதுவரை சனிபகவான் இருந்தார். உங்கள் ராசிக்கு 12&ம் இடத்திற்கு அவர் வந்தபோதே ஏழரை சனிகாலம் ஆரம்பமாகி விட்டது என்பதை அறிந்திருப்பீர்கள். உங்கள் ராசிக்கு வந்த பின்னரும் அது தொடரத்தான் செய்யது. ஆனால் பலாபலன்கள் மாறுபட்டு இருக்கும். உங்கள் ராசியில் அவர் இருந்தபோது உங்கள் உடல் நலத்தை பாதிப்படைய வைத்திருக்கலாம். மருத்துவச் செலவு ஏற்பட்டிருக்கும். வீண் அலைச்சல் ஏற்பட்டு இருக்கும். சிலர் வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதேநேரம் சனியின் 3&ம் இடத்துப் பார்வையால் எடுத்தகாரியத்தில் வெற்றி அடைந்து நல்ல பொருளாதார வளத்தை கண்டிருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி இருக்கும்.
இந்த நிலையில்தான் இப்போது சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது எழரை சனியின் இறுதி நிலை. இந்த ராசியில் இருக்கும் போது அவரது காட்டம் படிப்படியாக குறையும். உங்களுக்கு எவ்வளவுக்குஎவ்வளவு கஷ்டம் கொடுத்திருந்தாரோ அந்த அளவுக்கு நன்மை தர இனிஆயத்தமாவார். குறிப்பாக உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை தருவார். பொதுவாக சனிபகவான் 2&ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை சந்திக்கலாம். பணவிரயம் இருக்கும். சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம்.
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து நன்மை தர இயலாதவராக இருந்தாலும் தன்னுடைய பார்வையால் நன்மை தர தவறமாட்டார். அவரது 10&ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11&ம் வீடமான துலாம் ராசியில் விழுகிறது. இதன் மூலம் பொனும் பொருளும் கிடைக்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்தாலும் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பெண்களால் நன்மை கிடைக்கும்.
பொதுவாக கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை சற்று நோக்க வேண்டும். அந்த வகையில் சனிபகவான் மகர ராசியில் இருக்கும்போது குருபகவான் இரு முறையும், ராகு-கேது ஒரு முறையும் இடம் மாறுகின்றார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.