June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சனி பெயர்ச்சி பலன்கள்-கன்னி

1 min read

Saniperchi palangal Kanni Kaliyur Narayanan

25-12-2020
உங்கள் ராசிக்கு அதிபதி புதன். அதோடு புதன் உங்கள் ராசயில்தான் உச்சம் பெறுகிறார். புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் ஜாதக கட்டத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் கல்வி மூலம் உயர் பதவியை அடைவர். அதோடு செவ்வாயும் சிறந்த நிலையில் இருந்தால் அவர்கள் மருத்துவ படிப்பில் சிறப்பாக இருப்பார். சிலர் அறுவை சிகிச்சை நிபுணராகவும் விளங்குவர். ஜாதகத்தில் குருவும் சாதகமான இடத்தில் இருந்திருந்தால் ஆசிரியர் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். பொதுவாக கன்னிராசியினர் மென்மையான போக்கை கொண்டவர்கள். சாத்வீக குணம் பெரும்பாலோருக்கு இருக்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும் நிறைந்தவர்கள். மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்க்ள. எந்த தொழிலையும் பிறரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். இந்த ராசிக்கு உரிய ஆண்கள் மனைவிக்கும், இந்த ராசிப் பெண்கள் கணவருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள். இதனால் இவர்கள் வாழ்வில் பிரச்சனைகள் வந்தாலும் விரையில் அது தீர்ந்து போகும்.
சனிபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 4&ம் இடமான தனுசுவில் இருந்தார். அர்த்தாஷ்டமம் என்று சொல்லக்கூடிய இந்த இடத்தில் இருந்த போது அவர் உங்களுக்கு அவ்வளவாக நன்மைகளை அள்ளித்தந்திருக்க மாட்டார். பிரச்சினைகள் பல உங்கள் வாழ்வில் பின்னி எடுத்திருக்கும். குறிப்பாக குடும்பத்தில் பிரச்சினைகள் வந்திருக்& கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து செல்ல நேரிட்டு இருக்கலாம்.
இந்த நிலையில்தான் சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். இனி மேலே சொன்ன பிரச்சினைகள் அனைத் &திற்கு முடிவு கட்டலாம். மேலும் நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும். குறிப்பாக பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். 5&ம் இடத்திற்கு வந்திருக்கும் சனிபகவானால் முழுநன்மையை தரஇயலாது. குடும்பத்தினர் இடையே சிற்சில பிணக்குகள் வரலாம். மனைவி, மக்கள் மத்தியில் சிறுசிறு குழப்பங்கள் வரலாம். சிலர் ஒன்றும் இல்லாததை நினைத்து மன வேதனைப்பட்டுக் கொண்டு இருப்பர்.
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து சுமாரான பலனை தந்தாலும் அவர்தன் ஏழாம் இடத்துப்பார்வையால் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தர காத்திருக்கிறார். இவர்தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். இதில் அவரது ஏழாம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இதனால் பொன் பொருளை அள்ளி வழங்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். ஆனந்தமயமாக வாழ்வைத் தருவார். பெண்களால் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும்.
பொதுவாக சனிபகவானால் உங்களுக்கு நன்மையே அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற முக்கிய கிரங்களான குரு, ராகு-கேது ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகை சனி மகரத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் குரு 2 முறையும் ராகு&கேது ஒரு முறையும் இடம் மாறுகிறார்கள். அவர்களின் தாக்கமும் எல்லோருக்கும் ஏற்படும். அவர்களாலும் நன்மைகள் கிடைக்க பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.