July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

புத்தாண்டு பலன்கள் /மேஷம்

1 min read

New Year Benefits / Aries By Kaliyur Narayanan

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன் சாதகமாக நின்று மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஆண்டு மலர்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் குருபகவான் 10-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ் -சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.மேலும் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும். குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தருவார். 14-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 11-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்.
சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் தனுசு ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையே கிடைக்கும்.
ராகு இப்போது 2-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும் தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.
கேது இப்போது 8-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவரால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக்குறைவு முதலியன வரலாம்
இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை- இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
மேற்கண்ட நிலையை பார்க்கும்போது குருவால் ,அவ்வப்போது நற்பலன்கள் கிடைக்கும். குருபகவானின் பார்வையாலும் முன்னேற்றம் காணலாம்.
பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எந்த ஒரு காரியத் -தையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டி- யது இருக்கும்.மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். ஆனால் 4-4-2021 முதல் 14-9-2021 வரை எடுத்த காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.
பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. 4-4-2021 முதல் 14-9-2021 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்து அன்பும் பாசமும் கிடைக்கும். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சகோதரிகளால் சிறப்பான பலனை பெறுவர்.புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது உகந்ததாக அமையும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சீரான முனனேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும்.நவம்பர்13-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காணலாம். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. கோரிக்கை -கள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரம்: லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர்.யாரிடமும் கவனமுடன் பழகவும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். பணப் புழக்கம் இருக்கும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குரு தொழில் விருத்தியை தருவார்.தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றவும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
கலைஞர்கள்: சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங் -கள் வரும். எதிர்பார்த்த புகழ்,பாராட்டு கிடைக்- காமல் போகலாம். உங்களுக்கு வரவேண்டிய விருது போன்றவை தட்டிபறிக்கப்படலாம். அதே நேரம் பணவிஷத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்-களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பொருளாதார வளம் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை நல்ல வளர்ச்சி காண்பர்.ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். விரும்பிய பாடத்தை பெறலாம். போட்டிகளில் வெற்றி காண- லாம். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.
விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். .வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.4-4-2021 முதல் 14-9-2021 வரை விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் வருவாய் கிடைக்கும். கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம்.
பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. 4-4-2021 முதல் 14-9-2021 வரைகுடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். முன்னேறத்- துடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.கணவனின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு கணவரின் அன்பு கிடைக்கும். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.
உடல்நலம் பூரண குணம் அடைவர்.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். அப்போது ராகு, கேது ஆகியோருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள்.விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.