தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்தது
1 min read
Corona distribution is further reduced in Tamil Nadu
1.1.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்துள்ளது. இன்று 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் பதிவாகும் கொரோனா எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. தமிழக கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரவருமாறு:&
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,18,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,135 ஆக அதிகரித்துள்ளது.
டிஜ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 1,029 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,98,420 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,380 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,25,758-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர்- 3
செங்கல்பட்டு-54
சென்னை- 252
கோயம்புத்தூர்-82
கடலூர்-14
தர்மபுரி-11
திண்டுக்கல்-16
ஈரோடு-44
கள்ளக்குறிச்சி-2
காஞ்சிபுரம் -32
கன்னியாகுமரி-25
கரூர்-7
கிருஷ்ணகிரி-7
மதுரை-18
நாகப்பட்டினம்-10
நாமக்கல்-24
நீலகிரி-11
பெரம்பலூர்-0
புதுக்கோட்டை-8
ராமநாதபுரம் -2
ராணிப்பேட்டை-9
சேலம்-40
சிவகங்கை-4
தென்காசி-9
தஞ்சாவூர்-22
தேனி-6
திருப்பத்தூர்-6
திருவள்ளூர்-40
திருவண்ணாமலை-12
திருவாரூர் -14
தூத்துக்குடி-12
திருநெல்வேலி -10
திருப்பூர் -46
திருச்சி -20
வேலூர் -21
விழுப்புரம் 15
விருதுநகர் 12