இந்தியாவில் ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 16,505 people in one day in India
4.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்து 470 ஆக உணர்ந்து உள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 214 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 2 லட்சத்து 43 ஆயிரத்து 953 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.