மின்சாரத்தால் இயங்கும் 1.5 கிலோ மீட்டர் நீள இரட்டை அடுக்கு ரெயில்
1 min read
1.5 km long double decker train powered by electricity
7.1.2021
உலகில் முதன் முறையாக 1.5 கிலோமீட்டர் நீள இரட்டை அடுக்கு பெட்டக ரயிலை – காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மின்சாரத்தால் இயங்கும்.
1.5 கிலோ மீட்டர் ரெயில்
மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும் மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.