April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

நீண்ட போராட்டத்துக்கு பிறகு டிரம்ப் பதவியில் இருந்து இறங்க சம்மதம்

1 min read

Trump agrees to step down after a long struggle

7.1.2021

தேர்தலில் தோல்வி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பதவியில் இருந்து விலக ஒப்புக்கொண்டார். வருகிற 20ந் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தோல்வி

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் முடிந்தது. இந்தத் தேர்தலில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி ஜோ பைடன் 46&வது ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அறிவிக்கும் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

போராட்டம்

இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் இன்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

இதனை அடுத்து நடைபெற்ற தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையில் 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வழங்கினார். இதன் மூலம் வரும் 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதனிடையே தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ஜானாதிபதி டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், “தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மிகச்சிறந்த முதலாவது பதவிக்காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்,” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவில் நடந்த தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அடுத்த திருப்பமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான மாகாணமான ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.