தமிகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா; இந்திய அளவில் 19,587 பேர் பாதிப்பு
1 min read
Corona for 805 people in Tamil Nadu today; 19,587 people were affected in India
7.1.2021
தமிழக்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது-. இந்திய அளவில் நேற்று 19,597 பேர் பாதிப்பு அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பபட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,23,986 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் சென்னையில் 4பேர், திருச்சியில் 2 பேர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 911 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8,04,239 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 7,547 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நெல்லை, தென்காசி
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் சென்னையில் அதிக பட்சமாக 210 பேர் ஆகும். இதனை அடுத்து கோவையில் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
நெல்லை மாவட்டத்தில் இன்று 13 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்-குடியில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் 15 பேர், தென்காசியில் 5 பேர், தூத்துக்குடியில் 13பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.
மராட்டிய மாநிலம்
மராட்டிய மாநிலத்தில் இன்று(வியாழக்கிழமை) 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,58,282 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதுவரை மராட்டியத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 49,897 ஆகும். இன்று ஒரே நாளில் 3,350 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 18,56,109 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது அந்த மாநிலத்தில் 51,111 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்திய அளவில்
இந்திய அளவில் நேற்று (புதன்கிழமை ) 20,346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 19,587 கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர். நேற்று மட்டும் இந்திய அளவில் 222 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இந்தியாவல் குணமடைந்தோர் விகிதம் 96.36 சதவீதம் ஆக உயர்வடைந்து உள்ளது. இது உலகில் அளவில் மிக அதிக எண்ணிக்கை ஆகும்.