தமிழகத்தில் இன்று கொரோனா 665 ஆக குறைந்தது
1 min read
In Tamil Nadu today the corona has dropped to 665
14.1.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 665 ஆக குறைந்தது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:&
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று ( வியாழக்கிழமை) 665 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,28,952ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 826 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் மொத்தம் 8,10,218 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிக்கு இன்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 12,246 பேர் இறந்துள்ளனர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 195 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் சென்னையில் மொத்தம் 2,28,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,50,68,940 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 60,681 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 6,488 பேர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.-
இந்திய அளவில்…
இந்திய அளவிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று ( புதன்கிழமை ) 16,946 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,12,093 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது.