July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பரவல் 600க்கு கீழ் வந்தது

1 min read

Corona distribution in Tamil Nadu was below 600

17.1.2021

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று 600க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இன்று 600க்கும் கீழே கொரோனா பதிவாகி இருந்தது. இன்றைய கொரோனா தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 589 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா கண்டறியப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 770 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தாக்கியவர்களில் இன்று ஒரே நாளில் 7 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 5,940 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள. மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளா

கேரளாவில் இன்று மட்டும் 5 ஆயிரத்து 5- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இன்று 21 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 4408 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் அடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவாவில் இருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது கொரோனாவுக்கு 68 ஆயிரத்து 991- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.