கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை
1 min read
Intensive treatment for Minister Kamaraj affected by corona
19.1.2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அமைச்சர் காமராஜ்
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 6&ந் தேதிதான் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.