சசிகலாவுக்கு கொரோனா முற்றிலும் குணமானது. ஆனால்…
1 min read
Corona is completely healed for Sasikala
25.1.2021
சசிகலாவிற்கு கொரோனா முற்றிலுமாக குணம் ஆனது.
சசிகலாவுக்கு கொரோனா
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருகிற 27ந் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவ்வ போது தகவல் தெரிவித்து வருகிறது.
விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குணம் அடைந்தார்
அதில், “சசிகலாவுக்கு கொரோனா முற்றிலுமாக குணம் அடைந்துவிட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என்று கூறுப்பட்டு உள்ளது.
சிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே சசிகலா, பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று சென்னை திரும்பும் சசிகலா சென்னை வந்ததும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.