June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பரவல் 9,102 ஆக குறைந்தது

1 min read

Corona distribution in India has dropped to 9,102

26.1.2021

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒர நாளில் 9,102 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 8 மாதங்களுக்குப்பிறகு இந்த நிலைக்கு வந்துள்ளது.

குறைந்துவரும் கொரோனா

இந்தியாவல் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று( செவ்வாய்க்கிழமை) காலை கொரோனா தகவலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:&
இந்தியாவில் காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் 9,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு வந்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி 8,909 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,76,838 ஆக உள்ளது. இதில் இதுவரை 1,03,45,985 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,77,266 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது. அது ஆகஸ்டு 23-ந்தேதி 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் 5-ந்தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16-ந்தேதி 50 லட்சத்தையும் தொட்டது. டிசம்பர் 19-ந்தேதி ஒரு கோடியை எட்டியது.
இன்றைய கொரோனா 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *