2 ரூபாய் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது; மகள் வேதனையுடன் மகிழ்ச்சி
1 min read
Padmasree award for 2 rupees doctor; Daughter painfully happy
26.1.2021
2 ரூபாய் டாக்டரான திருவேங்கடத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு அவரது மகள் பிரீத்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதே நேரம் அவர் உயிருடன் இருக்கும்போது இந்த விருதை வழங்கி இருக்கலாம் என்ற வேதனையையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
டாக்டா திருவேங்கடம்
சென்னையில் பிரபலமான டாக்டராக விளங்கியவர் திருவேங்கடம். இவர் சிகிச்சை அளிக்க நோயாளிகளிடம் 2 ரூபாய் மட்டுமே வாங்குவார். இதனால் அவர் மிகவும் பிரபலமானார். அவரை புழகாதவர்கள் கிடையாது. அவர் இறந்துவிட்ட நிலையில் அவருக்கு இப்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.
திருவேங்கடத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தொடர்பாக அவரது மகள் பிரீத்தி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு எனது தந்தைக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர் உயிருடன் இருந்த போதே இந்த விருது கிடைத்து இருந்தால் அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவேங்கடம் உயிருடன் இருந்தபோது இந்த விருதை வழங்கி இருக்கலாம் என்று அவரது மகள் கூறும்போது அவரது முகத்தில் வேதனை தென்பட்டது.
உண்மைதான் ஒருவரின் தொண்டுக்கு அவர் உயிரோடு இருக்கும்போது அங்கீகாரம் வழங்கி இருக்க வேண்டும். இனியாது நல்ல தொண்டுள்ளம் கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து விருது வழங்க வேண்டும் என்பது அனைவரின் ஆதங்கள்.