June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றப்பட்டது

1 min read

The national flag was hoisted to sound 21 bombs in Delhi

26.1.2021
டெல்லியில் குடியரசு தினத்தையட்டி 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்.

குடியரசு தினவிழா

இந்தியா முழுவதும் இன்று ( செவ்வாய்க்கிழமை ) 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டம், டிராக்டர் பேரணி ஆகிய இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் குடியரசு தினவிழா நடைபெற்ற வருகிறது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார்.

21 குண்டுகள்

அதைத் தொடர்ந்து ராஜபாதைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வருகை தந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படை தளபதிகளை ஜனாதிபதிக்கு அறிமுப்படுத்தினார் பிரதமர் மோடி.
அதன்பின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.