“தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வோம்”- மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
“If DMK comes to power, we will arrest the main culprits in the DNPSC scandal” – MK Stalin’s speech
6.2.2021
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ந் தேதி முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்தல் முறைகேடுகள்நடந்துள்ளன. பிற மாநிலத்தவரை இறக்குமதி செய்யும் ஆணையமாக டி.என்.பி.எஸ்.சி. செயல்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. ஊழல் வழக்கில் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட சாதாரண பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் 25 ஆண்டுகால கட்சிப் பணிகளுக்கு பிறகே சட்டமன்றம் சென்றேன். முதல்வர் இன்னும் பல அறிவிப்புகளை வெளியிடுவார். அவர் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் விவசாயிகள், மக்கள் ஏற்க மாட்டார்கள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார். முதல்வர் பேச்சை அமைச்சர்கள் கேட்பதில்லை. தமிழகத்தில் அரைகுறை ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.