சசிகலா தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் வரை பேரணி நடத்த திட்டம்
1 min read
The plan is to hold a rally led by Sasikala up to the Jayalalithaa memorial
6.2.2021
சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ந் தேதி விடுதலையானார். தற்போது பெங்களூருவில் இருக்கும் அவர், நாளை மறுநாள் சென்னை வர உள்ளார்.
சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிலரும் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அவர்களை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பேரணி
இந்த நிலையில், சென்னை வர இருக்கும் சசிகலாவை வரவேற்கும் விதமாக பேரணி நடத்தப்படுகிறது-. முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில், சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.