June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 11,713 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 11,713 people in a single day in India

6.2.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

கொரோனா நிலவரம் பற்றி இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று( வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 11,713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,14,304 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,918 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,488 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,10,796 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,48,590 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 54,16,849 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *