சசிகலா உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார்
1 min read
Rajinikanth inquired about Sasikala’s health
9.2.2021
சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று( செவ்வாய்க்கிழமை) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த்
சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் என்னிடம் விசாரித்தார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.
ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.
ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.