May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா

1 min read

Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat resigns

9/3/2021

உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா

பா. ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்த ஒரு நாள் கழித்து உத்தரகாண்ட் முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராவத் இன்று மாலை 4 மணியளவில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

சில உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏக்கள் முதல்மந்திரி செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தலைமை மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன. இந்த விவகாரத்தை தொடர்ந்து, பா.ஜ.க பா.ஜனதா துணைத் தலைவர் ராமன் சிங் மற்றும் பொதுச் செயலாளர் துஷ்யந்த் சிங்வுதம் ஆகியோரை கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அனுப்பியது. சிங் மற்றும் கவுதம் ஆகியோர் மாநிலத்தின் நிலவரம் குறித்து கட்சித் தலைவர் நட்டாவிடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதை தொடர்ந்து பா. ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் உத்தரகாண்ட் முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத்திடம் பேச்சுவார்த்தைந் அடத்தினர். இதை தொடர்ந்து திரிவேந்திர சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பேட்டி

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது;-

நான்கு ஆண்டுகள் உத்தரகாண்ட் சேவை செய்ய கட்சி எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அளித்தது. அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. முதல்வராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு இப்போது வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சி இப்போது முடிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக உத்தரகாண்ட் முதல்வராக ஆக்கிய பாஜகவுக்கு நன்றி. ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இவவாறு அவர் கூறினார்.
அவர் பதவி விலகுவதற்கான காரணம் குறித்து ​​கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பாஜகவில் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுவதாக ராவத் கூறினார்.

பாஜக சட்டசபை கட்சி கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு ராமன் சிங் மற்றும் துஷ்யந்த் சிங் கவுதம் தலைமை தாங்குகிறார்கள்.

அடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில் தன் சிங் ராவத் முதல் இடத்தில் இருக்கிறார் தொடர்ந்து சத்பால் மகாராஜ், பாராளுமன்ற உறுப்பினர் அனில் பலூனி, ஆகியோர் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.