May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ம.தி.மு.க. 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டி

1 min read

MDMK Competition against AIADMK in all 6 constituencies

10.3.2021

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 6 தொகுதிகளிலும் ம.தி.மு.க. நேரடியாக அ.தி.மு.கவை எதிர்த்து களம் காண இருக்கிறது.

ம.தி.மு.க.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளில் ம.தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் அந்த ஆறு தொதிகள் எவை என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதாவது, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி) ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த 6 தொகுதிகளிலும், மதிமுக அதிமுக வேட்பாளர்களுடன் நேரடியாக களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சார்பில், சாத்தூரில்- ரவிச்சந்திரன், பல்லடத்தில்- எம்.எஸ்.எம். ஆனந்தன், வாசுதேவநல்லூரில்- மனோகரன், மதுராந்தகத்தில் – மரகதம் குமாரவேல் மதுரை தெற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ- எஸ்.எஸ். சரவணன், அரியலூரில், தாமரை ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக தி.மு.க.வும் அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும். இந்த 6 தொகுதிகளிலும் ம.தி.மு.க.வை எளிதில் எதிர்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. நினைக்கிறது. எனவே அதை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த ம.திமு.க. முடிவு செய்துள்ளளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.