காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் விவரம்
1 min read
Details of the 25 constituencies in which Congress will contest
11.3.2021
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் தொடர்பாக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
காங்கிரஸ்
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) கையெழுத்தானது. தொகுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார்.
தொகுதிகள்
பொன்னேரி, வேளச்சேரி, தென்காசி , ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை, கோவை தெற்கு, ஈரோடு, கிள்ளியூர், அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, மயிலாடுதுறை, உடுமலைப்பேட்டை, விருத்தாசலம் ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்டு
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது.
பவானிசாகர் (தனி), வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி, தளி உள்ளிட்ட தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது
பாஜக, அதிமுகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகிறது. பிற அணிகளுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் இல்லை என கமல் குறித்த கேள்விக்கு முத்தரசன் பதில் அளித்தார்.
தமிழ்மாநில காங்கிரஸ்
அ.தி–.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற ஜிகே வாசனின் தமிழ்நாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக- தமிழ்நாநில காங்கிரஸ் கட்சி இடையே இன்று இரவு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி, உள்பட 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.