இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களில் மேற்கு வங்காளம் முதலிடம்
1 min read
West Bengal has the highest number of beggars in India
11.3.2021
இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை 4.13 லட்சமாக உள்ளது. இதில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.
பிச்சை எடுப்பவர்கள்
நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி மந்திரி தாவர் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வ முறையில் இன்று(வியாழக்கிழமை) அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களில் ஆண்கள் 2,21,673 பேர். பெண்கள் 1,91,997 பேர். இவற்றில் மேற்கு வங்காளம் (81,224) முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் (65,835), ஆந்திர பிரதேசம் (30,218), பீகார் (29,723), மத்திய பிரதேசம் (28,695), ராஜஸ்தான் (25,853) ஆகியவை உள்ளன.
டெல்லியில் 2,187 பேரும், சண்டிகரில் 121 பேரும் உள்ளனர். லட்சத்தீவில் 2 பேரும், தாத்ரா நாகர் ஹாவேலி 19 பேரும், டாமன் மற்றும் டையூ 22 பேரும், அந்தமான் நிகோபர் தீவுகள் 56 பேரும் பிச்சைக்காரர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.