சீமானிடம் சசிகலா பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள்
1 min read
What did Sasikala say to Seeman? Sensational information
10.3.2021
சசிகலாவுடன் சீமான் சந்தித்தபோது சசிகலா என்ன சொன்னார் என்ற பரபரப்பான தகவலை இப்போது சீமான் வெளியிட்டுள்ளார்.
சசிகலாவுடன் சந்திப்பு
சசிகலா சிறை தண்டனை முடிந்தம் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னரே சென்னை வந்தார். சென்னை வந்ததும் அவரை சீமான் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி பற்றி பேசி இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் கூட்டணி பற்றி எதுவும் அவர்கள் பேசவில்லை. சசிகலா, சீமானிடம் என்ன சொன்னார் என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்று சீமான் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் சீமான் கூறியதாவது:
சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும் என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விசாரணைகளைத் தாண்டி நாங்கள் அரசியலும் பேசினோம்.
அ.தி.மு.க.வுடன்…
வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதிமுகவுடன் நான் சமாதானம் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
அதேவேளையில் அவர் நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விடுத்திருந்த சசிகலா, ”தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.” என்றார்.
அவர் ஒற்றுமை எனக் குறிப்பிட்டது அதிமுகவுடனான சமரச முயற்சியே என்று கூறப்பட்ட நிலையில், சீமான் இன்றைய பேட்டியில் சசிகலா அதிமுகவுடன் சமாதானத்தை விரும்பியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.