June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

“இந்துக்களுக்கு உதவி வேண்டாம்; இந்து மதத்தை கிண்டல் செய்பவர்களை துரத்துங்கள்” -மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் பேரரசு கோரிக்கை

1 min read

Do not help the Hindus; Expel those who mock Hinduism ”- Director Empire’s demand to MK Stalin

14.3.2021

“இந்துக்களுக்கு உதவி வேண்டாம்; இந்து மதத்தை கிண்டல் செய்பவர்களை துரத்துங்கள்” -என்று மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் பேரரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலையட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரபல சினிமா டைரக்டர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கு, தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிப்பதாய் கூறியிருந்தீர்கள் மகிழ்ச்சி! ஆனால் இந்துக்களுக்கு அந்த உதவி வேண்டாம். வேறொரு உதவி செய்யுங்கள்.

கிண்டல்

இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கும்படி பேசுபவர்களை கிட்டே சேர்க்காதீர்கள், இந்துமதத்தை இழிவாய் பேசுபவர்களோடு கூட்டணி வைக்காதீர்கள், உங்கள் கட்சியில் இந்து மதத்தை கேலி, கிண்டல் செய்து அதன் புனிதத்தை கெடுப்பவர்களை உங்கள் கட்சியைவிட்டே தூக்குவேன் என்று உறுதியளியுங்கள், இந்து மதத்தை மட்டுமல்ல யார் எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் தூக்கி எறியுங்கள், எங்களுக்கு இன்னொரு ஆசை தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.