July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்

1 min read

People’s Justice Center Candidate List

16.3.2021

மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர்கள் இடம்பெற்றது. அதுதவிர கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் மநீக சார்பில் சுபா சார்லஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

24 பேர்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:

ஆயிரம் விளக்கு தொகுதி – கே.எம்.சரீப்,
ராயபுரம் தொகுதி – குணசேகரன்,
திருவாரூர் தொகுதி – கபில் அரசன்,
தொண்டாமுத்தூர் தொகுதி – ஷாஜஹான்,
உடுமலைப்பேட்டை – ஸ்ரீநிதி,
பவானிசாகர் – கார்த்திக் குமார்,
செய்யூர் – அன்பு தமிழ்சேகரன்,
வந்தவாசி – சுரேஷ்,
தாராபுரம் (தனி) – சார்லி,
கரூர் – மோகன்ராஜ்,
வானூர் – சந்தோஷ்குமார்,
பாபநாசம் – சாந்தா,
ஒரத்தநாடு – ரங்கசாமி,
மன்னார்குடி – அன்பானந்தம்,
மதுராந்தகம் (தனி) – தினேஷ்,
கீழ்பெண்ணாத்தூர் – சுகானந்தம்
சிவகாசி – முகுந்தன்,
பூவிருந்தவல்லி – ரேவதி நாகராஜன்,
திட்டக்குடி – பிரபாகரன்,
வேதாரண்யம் – முகமது அலி,
காட்டுமன்னார்கோவில் – தங்க விக்ரம்,
வேப்பனஹள்ளி – ஜெயபால்,
கும்பகோணம் – கோபாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நகர் – ரம்யா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.