May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் நியமனம்

1 min read

Bihar state health officials appointed for corona prevention work in Tamil Nadu during election time

17.3.2021
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் முகக்கவசம் மற்றும் பொது சுகாதாரத்துவதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரிய சவாலாக அமைந்துள்ளது.

2 அதிகாரிகள் நியமனம்

இதனால் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார், ரோகினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினருடன் பீகாரில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடத்தியது எவ்வாறு என அம்மாநில அதிகாரிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரும் சூழலில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.