June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

1 min read

Corona to Minister CV Shanmugam

16.4.2021

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோந்த இவர், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார்.
விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

அன்று பிற்பகலில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதற்கான முடிவு நேற்று வெளியானதில் அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.