June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈ.வே.ரா.பெரியார் சாலை பெயர் மீண்டும் வந்தது

1 min read

The EVR Periyar road name came back

16.4.2021
சென்னையில் ஈ.வே.ரா. பெரியார் சாலை பெயர் மீண்டும் சூட்டப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா. பெரியார் சாலை

சென்னை, சென்ட்ரல் ªயில் நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி செல்லும் சாலை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றே அழைத்து வந்தனர்.
கடந்த 1979ம் ஆண்டு ஈ.வெ.ரா. பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. இதையட்டி, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில், கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்றே உள்ளது.
அதையே நெடுஞ்சாலைத் துறையினர், சமீபத்தில் வைத்த அறிவிப்பு பலகைகளில் எழுதி உள்ளனர். ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அறிவிப்பு பலகையில் இருந்த, கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்ற பெயரை, கறுப்பு பெயின்டால், சில அமைப்புகளை சேர்ந்தோர் அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என பெயர் மாற்றம்ப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *