இந்தியாவில் 2-வது நாளாக 2 லட்சத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா
1 min read
One day Corona crossed 2 lakhs for the 2nd day in India
16.4.2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. கடந்த ஆண்டு உருவான கொரோனாவின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.
கொரோனா நிலவம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் நேற்று ஒரே நாளில் 1,185 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,302 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையம் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,47,866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 15,69,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.